1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (17:04 IST)

கூடுதல் லட்சங்களுக்காக இதை செய்தாரா காஜல்??

நயன்தாரா போன்று காஜல் அகர்வாலும் பட பிரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார். இந்த கொள்கையை தற்போது கூடுதல் லட்சங்களுக்காக தகர்த்தியுள்ளாராம்.

\
 
 
காஜல் அகர்வால் தெலுங்கில் ராணாவுடன் நேனே ராஜு நேனே மந்திரி படத்தில் நடித்தார். இந்த படத்தை ஓடியோடி விளம்பரம் செய்துள்ளார் காஜல். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
 
பின்னர்தான், தெரிய வந்தது பட பிரொமோஷனுக்காக சம்பளத்தை தவிர்த்து காஜலுக்கு 30 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது என்று. இதனலேயே அவர் இவ்வாறு விழுந்து அடித்துக்கொண்டி படத்தை விளம்பர படுத்தினார் என்றும் கூறப்பட்டது.
 
ஆனால், உண்மை என்னவெனில் காஜல் கையில் தெலுங்கில் எந்த படமும் இல்லை. எனவேதான் இவ்வாறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது விடுகிறார் என கூறப்படுகிறது.