1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (23:50 IST)

அன்பானவர் அசராதவர் அடங்காதவர் யார் தெரியுமா? காஜல் அகர்வால் சொல்லும் உண்மை

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இந்த படம் தமிழகம் முழுவதும் மொத்தமே ரூ.12 கோடி தான் வசூல் செய்தது.



 
 
இந்த நிலையில் அன்பானவர் அசராதவர் அடங்காதவர் என்று அஜித், விஜய் மற்றும் சூர்யாவை பிரபல நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். சமீபத்தில் வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த காஜல் அஜித், விஜய், சூர்யா குறித்து கூறியதாவது:
 
அஜித் அன்பு, மரியாதையுடன் செட்டில் அனைவரையும் சமமாக நடத்துபவர். யாருக்கும் அட்வைஸ் செய்ய மாட்டார். ஆனால் அவரை சும்மா கவனித்தாலே போதும் பல  விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் அவருடைய பிரியாணி எல்லோருக்கும் ஸ்பெஷல். எனக்கும் செய்து கொடுத்தார். சான்ஸே இல்லை அவ்வளவு டேஸ்ட்
 
விஜய் நல்ல கடின உழைப்பாளி, செட்டில் அமைதியாக இருந்தாலும் கேமிரா ரோல் ஆக ஆரம்பித்தவுடன் நடிப்பில் அனைவரையும் அசரடிப்பார். வெற்றி தோல்விகளை த' என்று கூறினார் 
 
சூர்யா, பிரமாதமான நடிகர். ஒரு காட்சி சரியாக வரவில்லை என்று முடிவு செய்துவிட்டால் பரவாயில்லை என்று இயக்குனர் கூறினாலும் அடங்க மாட்டார். அந்த காட்சி முழு திருப்தி வரும் வரை நடித்து கொடுப்பார். நடிப்புல அவர் ஒரு மாஸ்டர். ஒரு கேரக்டருக்காக அவ்வளவு மெனக்கெடுவார்' எ
 
இவ்வாறு அஜித், விஜய், சூர்யா குறித்து காஜல் அகர்வால் கூறியுள்ளார்.