செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2016 (16:54 IST)

தீபாவளி படங்கள்... பதுங்கும் சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு, கத்திச் சண்டை

தீபாவளிக்கு இன்றைய தேதியில் 5 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடி, காஷ்மோரா, சைத்தான், கத்திச் சண்டை மற்றும் கடவுள் இருக்கான் குமாரு.

 
ஆனால், சமீபத்திய நிலவரம், இந்த ஐந்தில் மூன்று படங்கள் தீபாவளிக்கு பிறகே வெளியாகும்.
 
கத்திச் சண்டை படத்தின் பல காட்சிகள் இன்னும் எடுக்கப்பட வேண்டும். அதேபோல் கடவுள் இருக்கான் குமாரு படமும். சைத்தானைப் பொறுத்தவரை, கொடி, காஷ்மோரா போன்ற பிரமாண்டங்களுக்கு நடுவில் நசுங்க வேண்டுமா என்று யோசிக்கிறார்கள். அதனால் கொடி, காஷ்மோரா மட்டுமே தீபாவளிக்கு வெளியாகும் என ஒரு கணிப்பு உலவுகிறது. 
 
தீபாவளி நெருங்கும் போது இந்தப் பட்டியலில் இன்னும் பல படங்கள் சேர வாய்ப்புள்ளது.