1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 11 ஜூலை 2016 (12:19 IST)

கடவுள் இருக்கிறான் குமாரு... படத்துக்குள் படம்

கடவுள் இருக்கிறான் குமாரு... படத்துக்குள் படம்

ராஜேஷ் இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்து வரும், கடவுள் இருக்கிறான் குமாரு படத்தில், ஜீ.வி.பிரகாஷ் இயக்குனராக நடித்து வருகிறார்.


 
 
இயக்குனராக நடிப்பதால், கடவுளே... அவருக்கு இயக்குனராகும் ஆசை வந்துவிடக் கூடாது என்று நீங்கள் பிரார்த்திப்பதை உணர முடிகிறது. அப்படியொரு விபரீதம் நடக்காது என நம்புவோம்.
 
இந்தப் படத்தில் கதைக்குள் கதை என்பது போல், படத்திற்குள் படம் வருகிறதாம். அதாவது, இயக்குனர் ஜீ.வி.பிரகாஷ் எடுக்கும் படம் இன்னொரு கதையாக படத்துக்குள் வருகிறது.
 
கயல் ஆனந்தியுடன் நிக்கி கல்ராணியும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஜீ.வி.நடித்துள்ள இன்னொரு படமான புரூஸ்லீ திரைக்கு வருகிறது.