செவ்வாய், 19 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2019 (20:51 IST)

காப்பான் படத்தில் ஐந்து பாடல்கள் இவைதான்

சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'காப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது
 
இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் 'காப்பான்' திரைப்படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இந்த படத்தின் முதல் பாடல் 'சிறுக்கி' என்று தொடங்குகிறது. இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேசன், ரமணி அம்மாள் பாடியுள்ளனர், ஞானகரவேல் இந்த பாடலை எழுதியுள்ளார் 
 
இந்த படத்தின் இரண்டாவது பாடல் 'விண்ணில் விண்மீன்' என்று தொடங்குகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் மகள் நிகிதா ஹாரீஸ் பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் 
 
இந்த படத்தின் மூன்றாவது பாடல் 'ஹே ஹமிகோ' என்று தொடங்குகிறது. லெஸ்லி லீவிஸ், ஜொனிதா காந்தி ஆகியோர் பாடிய இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார் 
 
இந்த படத்தின் நான்காவது பாடல் குரலே குரலே' என்று தொடங்குகிறது. கபிலன் எழுதிய இந்த பாடலை ஜாவித் அலி, தர்ஷனா ஆகியோர் பாடியுள்ளனர் 
 
இந்த படத்தின் ஐந்தாவது பாடல் 'மச்சான் இங்க வந்திரு' என்று தொடங்கும் பாடல் இந்த பாடலை கவிஞர் வைரமுத்து எழுத , கரிஷ்மா ரவிச்சந்திரன், நிகிதா காந்தி மற்றும் ஷப்னம் ஆகியோர் பாடியுள்ளனர் 
 
இந்த ஐந்து பாடல்களும் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது