1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (16:53 IST)

ஓவியாவுக்காக ஆரவிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் பிக் பாஸ் வீட்டின் புது வரவு!

ஓவியாவுக்காக ஆரவிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் பிக் பாஸ் வீட்டின் புது வரவு!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இன்று வெளியான புதிய புரோமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் புதிய முகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே இந்த வாரம் சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் புதிதாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.


 
 
இந்நிலையில் இந்த வாரமே மூன்றாவது புதிய போட்டியாளராக காஜல் பசுபதி ஆட்டோவில் வந்து பிக் பாஸ் வீட்டில் களம் இறங்கினார். பார்ப்பதற்கு டெர்ரர்ராக இருக்கும் காஜல் பசுபதி வந்த முதல் நாளே தனது டெர்ரர் வேலையை ஆரம்பித்துள்ளார்.
 
குறிப்பாக ஓவியா விவகாரம் குறித்து ஆரவிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார் அவர். அப்போது ஆரவால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் முகத்தை ஒரு மாதிரியாக விவரிக்க முடியாதவாறு வைத்திருந்தார்.

 

 
 
என் மனசுல உள்ளதை நான் கேட்கனும், என்னால இதை எல்லாம் கேட்காமல் இந்த வீட்டில் இருக்க முடியாது என ஆரம்பிக்கும் காஜல் பசுபதி ஆரவ்வை பார்த்து ஹாட்டா, அழகா, உலகமே விரும்பக்கூடிய ஒரு பெண்ணை எப்படி உங்களால வேணாம்னு சொல்ல முடிந்தது என கேட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறார் ஆரவ்.