1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (11:22 IST)

விஜய் 61 படத்தில் இருந்து விலகியது ஏன்? சொல்லாமல் இருப்பதே நல்லது: ஜோதிகா பரபரப்பு பேட்டி!!

விஜய் 61 வது படத்தில் நித்யா மேனன் நடித்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா. ஆனால் சில காரணங்களால் ஜோதிகா படத்தில் இருந்து விலகினார்.


 
 
பாலா படமான நாச்சியார் படத்தில் ஜோதிகா கமிட்டானதால் தான் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வந்தன.
 
மேலும், சிவகுமார் மற்றும் சூர்யா நடிக்க கூடாது என தெரிவித்ததால் அவர் படத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார் எனவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் ஒரு பேட்டியில் ஜோதிகா இதுகுறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நான் ஏன் விஜய் படத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறாமல் இருப்பது நல்லது. சூர்யா மற்றும் அப்பா (சிவகுமார்) இருவரும் இதற்கு காரணம் இல்லை என தெரிவித்தார்.