1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : சனி, 13 மே 2017 (07:03 IST)

அவர் என்னை ஏமாற்றிவிட்டார்! அதற்கு இதுவே பரவாயில்லை: அமலாபால்

சமீபத்தில் கனடா நாட்டின் பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் மும்பையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகின் விஐபிக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆனால் வெறும் நான்கு பாடல்களை மட்டுமே பாடிய ஜஸ்டின் பீபர், பிற பாடல்களை ஒலிப்பதிவு செய்ததை பாடிவிட்டு அதற்கு நடனம் மட்டுமே ஆடினார். இதனால் பார்வையாளர்கள் கடுமையாக ஏமாற்றம் அடைந்தனர்.



 


இவ்வாறு ஏமாறியவர்களில் ஒருவர் நம்மூர் அமலாபால். இவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜஸ்டின் பீபர் என்னை நன்றாக ஏமாற்றிவிட்டார். இந்த இசை நிகழ்ச்சி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை' என்று பதிவு செய்திருந்தார்.

மேலும் கிளிகள் கூட ஜஸ்டினை விட நன்றாக பாடியிருக்கும். அந்த அளவுக்கு நிகழ்ச்சி மோசமாக இருந்தது என்று கூறினார். அமலாபாலின் கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.