1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (17:33 IST)

வலியால் கதறி அழும் ஜூலி; ச்சீ கன்றாவி அவ நடிக்கிறா - காயத்ரி பேச்சு! (வீடியோ)

நேற்றைய ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டிற்கு சில விருந்தினர்கள் வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் ஜுலி  முந்திரிக்கொட்டை வேலையில் ஈடுபடுகிறார். ஜூலியின் நடவடிக்கையை சிறிதும் விரும்பாத காயத்ரியும், நமீதாவும் ஏதொ  சொல்ல அவமானத்தில் அறையில் உட்கார்ந்து அழுவது போன்றும், அப்போது ஓவியா ஆறுதல் கூறுகிறார்.

 
இந்நிலையில் காயத்ரியும், நமீதாவும் தனியாக அமர்ந்திருக்கும்போது ஒரு நபரை பற்றி திட்டி கொண்டிருக்கின்றனர். அப்போது  கூறிய நமீதா ஆங்கிலத்தில் நான் அவள பார்த்தல் அவ மூஞ்சிய ஒடச்சிருவேன் என ஆவேசமாக பேசுகிறார்.
 
இதனை தொடர்ந்து அழுதுகொண்டிருந்த ஜூலி திடீரென தனது வயிற்றை பிடித்து கொண்டி கதறி அழுகிறார். உடனே ஆண்  போட்டியாளர்கள் பதறிப்போய், சினேகன் ஜூலியை தூக்கி கொண்டு ஓடுவதுபோலும், சக்தி கேமரா முன் சென்று ஏதோ  சொல்வது போலும் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டது.
 
இந்நிலையில் பெண் போட்டியாளர்களில் ரைசா மற்றும் ஓவியாவை தவிர மற்ற போட்டியாளர்களான நமீதா, காயத்ரி  ரகுராமும் கூலாக உட்கார்ந்திருந்தனர். அதில் காயத்ரி ரகுராம் ச்சீ கன்றாவி அவ நடிக்கிறாள் என்று கூறுகிறார். உண்மையில்  நடந்தது என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.