திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (11:33 IST)

நன்றி இல்லாமல் நடந்துகொள்ளும் ஜூலி; உண்மையை சொன்ன ஆரவ்!

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து என்னா ஆக போகிரது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. போடியாளர்களில் யார் வம்புக்கும் தும்புக்கும் போகாதவர் ஓவியா. அதே நேரம் வந்த வம்பை விடாதவர். அவரின் செயல்பாடுகளை பார்க்கும் மக்கள் அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்.

 
இந்நிலையில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு நெட்டிசன்கள் அவரவர் குணங்களுக்கு ஏற்றவாறு பட்டம் அளித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு எதிராக காயத்ரி, நமீதா மற்றும் ஜூலியும் சேர்ந்து கொண்டு எதிராக உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வந்தாலும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஆரவ் மட்டும்தான்.
 
அனைவரும் ஒன்றாக இருந்து ஓவியாவை வெளியேற்ற எதாவது விதி இருக்கிறதா என பிக்பாஸிடம் கேட்போம்" என் ஜூலி  சொன்னபோது குறுக்கிட்ட ஆரவ், "அப்படி இருந்தா இரண்டாவது வாரமே நீ வெளியே போயிருப்ப" என ஜூலிக்கு பதிலடி  கொடுத்தார். மேலும் ஆதரவு தந்த ஓவியாவுக்கு நன்றி இல்லாமல் நடந்துகொள்கிறார் ஜூலி என பின்னர் சினேகனிடம்  கூறினார் ஆரவ் என்பது குறிப்பிடதக்கது.