1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2017 (13:41 IST)

அம்மாடியோவ் ஜூலியா இது?: எதுக்குமா உனக்கு இந்த வேலை!

அம்மாடியோவ் ஜூலியா இது?: எதுக்குமா உனக்கு இந்த வேலை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜூலியின் அட்டகாசம் தாங்க முடியாமல் சக போட்டியாளர்கள் கடுப்பு ஆகும் காட்சிகள் இன்று அரங்கேர உள்ளன.


 
 
பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து ஜூலியை சுற்றியே எல்லாம் நடக்கின்றன. பல்வேறு சர்ச்சைகள், குழப்பங்கள் என ஜூலி பிக் பாஸில் வலம் வருகிறார். தொடக்கத்தில் இருந்த ஆதரவையும் இழந்து தற்போது மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.
 
ஏற்கனவே அடுத்த வாரம் நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என சினேகனிடம் கூறிக்கொண்டு இருந்தார் ஜூலி. இந்நிலையில் இன்று நடைபெறும் சமையல் போட்டிக்கு ஜூலியை நடுவராக நியமிக்கிறார் பிக் பாஸ்.

 

 
 
புதிதாக தலைவர் பதவியுடன் கெத்தாக வரும் ஜூலி மற்றவர்களிடம் சீரியசாகவே அதட்டும் தொனியில் பேசுவதை சக போட்டியாளர்கள் ரசிக்கவில்லை. ஜாலியாக தலைவர் பதவியில் இருந்து சமைத்த உணவு எப்படி இருக்கிறது என கூறியிருக்கலாம். ஆனால் அவர் மற்றவர்களிடம் கோபப்பட்டு எரிச்சலுடன் பேசுகிறார். இது ஒரு சிலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.
 
இதனையடுத்து சமையல் போட்டி எல்லாம் முடிந்த பின்னர் காயத்ரி ரகுராம் ஜூலியை தனியாக அழைத்து திட்டுகிறார். நாங்க எல்லாம் தலைவர் பதவியில் இருந்த போது இப்படி தான் இருந்தோமா?. புதிதாக தலைவர் பதவியில் வந்ததும் கொம்பா முளைத்துவிட்டது என தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.