பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜூலி வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஜூலி சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தென்பட்டார்.
அங்கு மேட்ச் பார்க்க வந்த பரணியை தொடர்பு கொண்டு வெளியே வரச்செய்து அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்
பரணியை அண்ணன் என்று கூறிய நிலையில் அவர் வீட்டின் சுவர் ஏறி குதிக்கும்போது தடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஜூலியின் மனதில் இருந்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மன ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்ததால் அவர் பரணியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது.
ஜூலி செய்த பல சூனியத்தால் தான் ஓவியா வெளியேறினார் என்றாலும் அவர் செய்த தவறுகளுக்கு தண்டனையாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் இனியும் ஜூலியை விமர்சனம் செய்யாமல் விலகிவிடுவதே நல்லது என்று பலர் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.