வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (13:16 IST)

நான் கார்த்திக் சுப்பராஜின் ரசிகன்… மலையாள நடிகர் பாராட்டு!

நடிகர் ஜோஜு ஜார்ஜ் கார்த்திக் சுப்பராஜின் ரசிகர் என்று கூறி பாராட்டியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகிய படமாக ஜகமே தந்திரம் அமைந்துள்ளது.

இந்த படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகும் மலையாள முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ் ‘நான் கார்த்திக் சுப்பராஜின் ரசிகர்’ என்று கூறியுள்ளார். மேலும் ‘அவரின் பீட்சா படம் பார்த்த போதே அவரை சந்திக்க முடிவு செய்தேன். ஆனால் இப்போதுதான் அமைந்துள்ளது. இந்த படத்தின் எடிட்டர்  மூலமாகதான் சந்தித்தேன். என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதி ஆடிசன் செய்தார். என்னுடைய உடைந்த தமிழில் நடித்தேன். ஆனால் அவருக்கு பிடித்துவிட்டது’ எனக் கூறியுள்ளார்.