இந்த பாலிவுட் நடிகர்தான் விஜய்க்கு வில்லனாம்! எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!

Last Modified வெள்ளி, 7 மே 2021 (07:57 IST)

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் விஜய் 65 படத்தின் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்று முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து திரும்பியுள்ளனர். அதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் வில்லன் யார் என்று இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் இப்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் கதாநாயகனாக நடித்து வரும் ஜான் ஆப்ரஹாம் விஜய்க்கு வில்லனாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :