1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (15:02 IST)

ரஹ்மானின் 6 பாடல்களுக்காகவே உருவான படம்… சூப்பர்ஹிட் படம் பற்றி இயக்குனர் சொன்ன தகவல்!

தமிழ் சினிமாவில் ரட்சகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பிரவீன் காந்தி. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆன அந்தபடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து ஜோடி மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை பிரவீன் காந்தி இயக்கினார்.

இதில் ஜோடி படம் பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் ரஹ்மான் இசையில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு ரஹ்மானின் பாடல்கள் முக்கியமானக் காரணமாக அமைந்தது. இந்த படத்துக்காக ரஹ்மான் ஒரு பாடல் கூட கம்போஸ் செய்யவில்லையாம். அவர் அதற்கு முந்தைய ஆண்டு இசையமைத்த ஒரு இந்தி படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதால், அதை ஆல்பமாக இயக்கலாம் என முடிவு செய்து, அதற்கு இயக்குனராக பிரவீன் காந்தியை நியமித்துள்ளனர்.

ஆனால் பாடல்களைக் கேட்ட, பிரவீன் காந்தி, இந்த பாடல்களுக்கு எற்ற கதையை உருவாக்கியதுதான் ஜோடி திரைப்படமாம். இதை அவரே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.