வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (13:38 IST)

18 நாட்களில் ஓடிடியில் ரிலீஸான ஜீவாவின் ‘பிளாக்’ திரைப்படம்!

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரித்து நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியானது பிளாக் திரைப்படம். இது coherence என்ற திரைப்படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியாகும் போது ரஜினியின் வேட்டையன் ரிலீஸ் ஆனதால் பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு, முதல் நாள் முதல் காட்சி ரத்தானது.

இப்படி பல தடைகளுக்குப் பின்னர் ரிலீஸான இந்த திரைப்படம் இப்போது நேர்மறையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கியது. வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் பிளாக் படத்துக்கு செல்ல ரசிகர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். சிறு பட்ஜெட் படம் என்பதால் இந்த படம் லாபகரமான வசூலைப் பெற்றது.

இந்நிலையில் படம் ரிலீஸாகி 18 நாட்களிலேயே இப்போது ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது ப்ளாக் திரைப்படம்.