ரிப்போர்ட்டராக நடிக்கும் ‘நண்டு’ ஜெகன்
இரட்டை அர்த்த வசனங்களுக்குப் பெயர்பெற்ற ‘நண்டு’ ஜெகன், ரிப்போர்ட்டராக நடிக்கிறார்.
தேஜா இயக்கத்தில் ராணா டகுபதி நடித்துள்ள படம் ‘நான் ஆணையிட்டால்’. அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரிப்போர்ட்டராக நடித்துள்ளார் ‘நண்டு’ ஜெகன். சிறிய வேடம் என்றாலும், முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதுவும், தமிழ் வெர்ஷனில் மட்டுமே அவர் நடித்திருக்கிறாராம். இவரைப் பற்றிய இன்னொரு செய்தியும் இருக்கிறது. சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார் இவர்.