செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 17 ஜூலை 2017 (16:34 IST)

டிக் டிக் டிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


 

 
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறர். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த வனமகன் வெற்றிப்பெற்றது. இதில் ஜெயம் ரவி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜன் தற்போது ஜெயம் ரவியை வைத்து விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை படமாக்கி வருகிறார். இந்த டிக் டிக் டிக் படம் இந்தியாவின் முதல் விண்வெளி கதைக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
 
இந்திய விண்வெளி வீரராக ஜெயரம் ரவி வெடிக்கும் விண்கலத்தில் கயிற்றை பிடித்து தொங்குவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.