திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (22:11 IST)

விஜய், தனுஷுடன் மோத முடிவு செய்த ஜெயம் ரவி

வரும் தீபாவளி திருநாளில் விஜய்யின் சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 'என்.ஜி.கே' பின்வாங்கியது. இதனால் 'சர்கார்' சோலோவாக தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் திடீரென தனுஷின் 'வடசென்னை' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்ற செய்தி வெளிவந்தது. அதுமட்டுமின்றி அஜித் படம் தீபாவளிக்கு வரவில்லை என்றாலும் அஜித்தின் தீவிர ரசிகராகிய ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு வந்தது. எனவே தீபாவளி போட்டி சற்று கடுமையானது.

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் 'அடங்க மறு' திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அவ்வாறு உறுதி செய்யப்பட்டால் விஜய், தனுஷ் படங்களுடன் ஜெயம் ரவியின் 'அடங்கமறு' படமும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.