1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2015 (11:36 IST)

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம் - கமலின் ஜல்லிக்கட்டு ஆதரவு பேச்சு

புகைப்பட கலைஞர் சுரேஷின் ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சி சென்னையில் நடந்தது. நடிகர் கமல் குத்து விளக்கேற்றி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.


 
 
அப்போது அவர் பேசியதாவது -
 
ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது மகிழ்ச்சி. இதில், இடம் பெற்றுள்ள காட்சிகள் இந்த விளையாட்டின் பெருமையை விளக்குவதாக உள்ளன. ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு. நமது பாரம்பரியத்தின் தொடர்ச்சி. தமிழர்களின் அடையாளம்.



 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுகளில் மிருகங்கள் துன்புறுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிருகங்களை யாரும் துன்புறுத்துவது இல்லை. வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாகவே தமிழகத்தில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.


 
 
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. எனவே, ஆண்டு தோறும் தமிழர் திருநாளில் இது நடத்தப்பட வேண்டும். தை மாதம் நெருங்கி வருகிறது.


 
 இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற வேண்டும். அது தொடர வேண்டும்.
 
- இவ்வாறு கமல் பேசினார்.