ஜெயிலர் ஷூட்டிங் இன்னும் எத்தனை நாட்கள் நடக்க உள்ளது?.. லேட்டஸ்ட் அப்டேட்!
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ”ஜெயிலர்” படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களோடு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.
தற்போது ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவின் மங்களூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் அறிமுகப்பாடல் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி அந்த முழுக்க முழுக்க ஜெயிலில் ரஜினியின் மாஸ் நடனத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடல்தான் படத்தின் முதல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகி வரும் தகவலின் படி, இன்னும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு 16 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதமுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல விரைவில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கிலும் ரஜினி கலந்துகொள்ள உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.