1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (13:11 IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு!

பிரபல நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த டாப்ஸி தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை டாப்ஸி பல்வேறு பிரச்சினைகளில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பேசியது சிலசமயம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இயக்குனர் அனுராக் காஷ்யப்-ம் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்த நிலையில் இருவர் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.