ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (07:07 IST)

தலைவர் 171 படத்துக்கும் ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கும் தொடர்பிருக்கா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்தில் விதவிதமான கடிகாரங்களைக் கைவிலங்கு போல அணிந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ரோலக்ஸ் கதையைதான் லோகேஷ் ரஜினியை வைத்து படமாக எடுக்கிறாரோ என்று தங்கள் கற்பனைக் கதைகளை பேச ஆரம்பித்துள்ளனர்.