ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (11:21 IST)

ஆங்கில இசையை காப்பியடித்து லியோவில் பாடலா?? – சர்ச்சையில் சிக்கிய அனிருத்!

Otinicka
ஆங்கில இசை ஆல்பம் ஒன்றிலிருந்து இசை குறிப்பை எடுத்து லியோ பாடலில் அனிருத் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் லியோ. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் நேரடி பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி பாடலாக அனிருத் இசையமைத்த சில ஆங்கில பாடல்களும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அவ்வாறு லியோவில் இடம்பெற்ற “காமன் மேன்” பாடலின் இசை ஆங்கில இசையமைப்பாளரான ஓட்டிநிகா (OTNICKA) வின் இசை ஆல்பம் ஒன்றோடு பொருந்தி போவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஓட்டிநிகாவின் அந்த இசை வீடியோவின் கமெண்டிலேயே சிலர் லியோ என கமெண்ட் செய்து வர, விஷயம் தெரிந்த ஓட்டிநிகா தன்னிடம் இந்த இசையை பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை என்று கூறியுள்ளார். பிரபலமான பீக்கி ப்ளைண்டர்ஸ் வெப் தொடருக்கு இசையமைத்தவர் ஓட்டிநிகா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து தனி பதிவு ஒன்று இட்டுள்ள ஓட்டிநிகா, பலரும் இதுகுறித்து தனக்கு மெயில் அனுப்பி வருவதாகவும், இதுதொடர்பாக ஆலோசித்து தேவைப்பட்டால் உரிய நடவடிக்கைகள் தனது தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சினி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K