1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (07:54 IST)

ரிலீஸுக்கு முன்பே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் இறுகப் பற்று!

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் இறுகப் பற்று. எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவ்ராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ வெளியான போதே வித்தியாசமான கதைக்களம் என்ற கவன ஈர்ப்பை இந்த படம் பெற்றது. அதன் பின்னர் வெளியான டிரைலரும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் சினிமா சம்மந்தப்பட்ட பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.

அதில் பெருவாரியோனோர் படத்தைப் பார்த்து படக்குழுவை பாராட்டியுள்ளனர். இதையடுத்து படம் நாளை ரிலீஸ் ஆகும் நிலையில் ரிலீஸூக்கு முன்பே பாசிட்டிவ் விமர்சனங்களை இந்த படம் குவித்துள்ளது.