1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 28 அக்டோபர் 2015 (16:56 IST)

இஞ்சி இடுப்பழகிக்கு தேதி குறிச்சிட்டாங்க

அனுஷ்கா, ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் இஞ்சி இடுப்பழகி (தெலுங்கில் சைஸ் ஸீரோ) என்றோ வெளியாகியிருக்க வேண்டும். ருத்ரமாதேவியின் வருகையில் இஞ்சி இடுப்பழகிக்கு இடைஞ்சல் ஏற்பட, நவம்பர் 27 -ஆம் தேதிக்கு தள்----ளி வைத்துள்ளனர்.


 
 
இந்தப் படத்துக்காக இருபது கிலோ எடைபோட்டு இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தார் அனுஷ்கா. அம்மணியின் டெடிகேஷனுக்கு முன்னால், ஆண் நடிகர்களே பணால்.
 
இஞ்சி இடுப்பழகியின் பாடல்களை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடுகின்றனர். சைஸ் ஸீரோவின் பாடல்கள் முன்னதாக நவம்பர் ஒன்றே வெளியாகிறது.
 
இஞ்சி இடுப்பழகியில் ஜீவாவும், சைஸ் ஸீரோவில் நாகார்ஜுனாவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர்.