ஆஸ்கர் குழு ஒருங்கிணைப்பு குழுவில் இந்திய நட்சத்திரங்கள்
ஆஸ்கர் விருது ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய முதன்முதலாக இந்திய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் பிரபல நடிகர்களான அமிதாப் பச்சன், அமீர் கான், சல்மான் கான் உள்பட பல பிரபலங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும்,. ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்ய புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆஸ்கர் நிர்வாகக் குழு.
இதன்படி இந்த குழுவில் கலந்து கொள்ள அமிதாப் பச்சன், அமீர் கான், சல்மான் கான், இர்ஃபான் கான் மற்றும் நடிகைகள் ஐஷ்வர்யா ராய், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட் இயக்குநர்கள் மிருணாள் சென், கவுதம் கோஸ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஸ்ட்யூம் டிசைனர் அர்ஜுன் பாசின், ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன், 'கபாலி' படத்தில் சவுண்ட் டிசைனராகப் பணியாற்றிய அம்ரித் பிரீத்தம் தத்தா ஆகியோரும் ஆஸ்கர் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய அழைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த குழுவில் தென்னிந்திய கலைஞர்கள் யாரும் இல்லாதது தென்னிந்திய திரையுலகினர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.