திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (09:40 IST)

அய்யோ…. 30,000 பேரா – இந்தியன் 2-ல் பிரம்மாண்ட சண்டைக்காட்சி !

இந்தியன் 2 வில் கமல்ஹாசன்

இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி ஒன்றில் 30,000 பேர் சண்டையிடுவது போல அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. கமல் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் காஜல் அஃகர்வால் கதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக், டெல்லி கணேஷ், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு  செய்து வருகிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய ஆச்சர்யமான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி ஒன்றை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் 30,000 பேரை வைத்து எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.