1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 13 ஜூன் 2016 (13:14 IST)

அரைகுறை ஆடையில் நடிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன்: நடிகை ஆனந்தி

அரைகுறை ஆடையில் நடிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டேன்: நடிகை ஆனந்தி

ஆனந்தி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2012 ஆவது ஆண்டில் பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.


 

வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பிரபு சாலமனின் கயல் என்ற வெற்றித் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ்த் திரையுலகில் உள்ள வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார்.
 
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரருக்கு ஜோடியாக ஆனந்தி  நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை ஆனந்தி அளித்த பேட்டி ஒன்றில் நடிகையாக வேண்டும் என்று ஆர்வம் இல்லை. எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். கயல் படத்தில் டைரக்டர் பிரபு சாலமன் நடிப்பு சொல்லிக் கொடுத்து என்னை பிரபலபடுத்தினார். திரிஷா இல்லன்னா நயன்தாரா, பொறியாளன், சண்டி வீரன் உள்பட பல படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறேன்.
 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் தாதாவின் மகளாக வருகிறேன். இந்த படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு சிபாரிசு செய்தார் என்பதில் உண்மை இல்லை. படப்பிடிப்பில் என்னிடம் எல்லோரும் அன்பாகவும், அக்கறையோடும் பார்த்துக்கொண்டனர். இந்த படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்து இருக்கிறது. 
 
ஏற்கனவே நான் நடித்த சில படங்களில் எனக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. டைரக்டர் ஆரம்பத்தில் என்னிடம் கதை சொன்னதை மீறி படப்பிடிப்பில் கவர்ச்சியாக நடிக்கும்படி வற்புறுத்தப்பட்டேன். அரைகுறை ஆடையை கொடுத்தும் உடுத்த சொன்னார்கள். எனவே கவர்ச்சி ஆடைகளை உடுத்த மாட்டேன் என்று மறுத்து விட்டேன். மீறி என்னை வற்புறுத்தினால் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விடுவேன் என்றும் மிரட்டினேன். இப்போதெல்லாம் கதை கேட்கும்போதே கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குட்டைப்பாவாடை அணிய மாட்டேன் என்றெல்லாம் டைரக்டரிடம் உறுதியாக சொல்லி விட்டுத்தான் நடிக்க செல்கிறேன். இவ்வாறு ஆனந்தி கூறியுள்ளார்.