புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 20 மே 2017 (12:35 IST)

அந்த விஷயத்தில் நான் அஜித் மாதிரி இல்லை: நடிகர் விஜய்!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் தனக்கென்று ஒரு தனி இடத்தை கொண்டுள்ளனர். அஜித் இருக்கிற ஹீரோக்களில்  அழகானவர், மாஸ் ஹீரோ. அதேபோல் நடனம், காமெடி, சண்டை போன்றவற்றில் அசத்துபவர் விஜய். கோலிவுட்டின் பாக்ஸ்  ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே தான் மாறி மாறி முறியடிப்பார்கள்.

 
இந்நிலையில் பிரபல வானொலியில் வேலைப்பார்க்கும் ஒருவர் விஜய்யிடம் சில வருடங்களுக்கு முன் பேசியுள்ளார். அப்போது பேசியபோது ‘அஜித் சாரை பார்த்து எந்த விஷயத்தில், நாம் இப்படி இல்லையே’ என்று வருத்தப்பட்டுள்ளீர்கள் என  கேட்டுள்ளார். அதற்கு விஜய் ‘அஜித் செம்ம ஸ்மார்ட் நண்பா, அப்படி நாம் இல்லையே’ என ஜாலியாக சொல்ல,  இதைக்கேட்ட அனைவருமே அசந்து விட்டார்களாம்.