1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (11:18 IST)

சர்வர் சுந்தரத்தில் சோனியா அகர்வால், பிரசன்னா

சர்வர் சுந்தரத்தில் சோனியா அகர்வால், பிரசன்னா

சந்தானம் தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் என்று இரு படங்களில் நடித்து வருகிறார். அதில், தில்லுக்கு துட்டு படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.


 


சர்வர் சுந்தரத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும் நடித்து வருகிறார்.
 
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சோனியா அகர்வால், பிரசன்னா இருவரும் கலந்து கொண்டனர். சென்னை நகரில் புதிதாக கபே ஒன்று திறக்கப்படுவது போன்ற அந்தக் காட்சியில் நடிகர்களாகவே சோனியா அகர்வால், பிரசன்னா இருவரும் நடித்தனர். இந்த கெஸ்ட் ரோலுக்காக அவர்கள் பணம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.
 
சர்வர் சுந்தரம் என்று பெயர் வைக்கப்பட்டாலும் பாலசந்தரின் சர்வர் சுந்தரத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.