செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:42 IST)

சமீப நாட்களாக ட்விட்டரில் ஆபாச படங்கள் பரவுவது அருவருப்பாக இருக்கிறது: நடிகை தன்சிகா!

மீரா கதிரவன் தயாரித்து இயக்கும் புதிய படம் ‘விழித்திரு.’ இந்த படத்தில் விதார்த், கிருஷ்ணா, வெங்கட் பிரபு,  எஸ்.பி.பி.சரண், தம்பி ராமய்யா, தன்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படக்குழுவினர் அனைவரும்  சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.


 
 
இந்த படத்தில் காதல், மோதல், நகைச்சுவை, திகில் ஆகிய அனைத்து அம்சங்களும் உள்ளன. சென்னை குடிசைவாசி  பெண்ணாக நான் நடித்து இருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர், சரோஜாதேவி. படத்தில், எனக்கு ஒரு சண்டை காட்சியில்  துணிச்சலாக நடித்தேன். நான் ஏற்கனவே சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்று இருப்பதால், சண்டை காட்சியில் நடிப்பது சுலபமாக இருக்கிறது. 
 
இந்த காலகட்டத்தில், பெண்கள் அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது, அவசியம். பாலியல் பிரச்சினைகளில்  இருந்து தப்பிக்க, தற்காப்பு கலை உதவியாக இருக்கும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டால், முரட்டு சுபாவம் வந்து விடுமோ என்று பயப்பட  வேண்டாம். மனம், ஒரு நிலைப்படும். கோபம் குறையும். பதற்றம் ஏற்படாது.
 
மேலும் தன்சிகா டுவிட்டரில் பரவும் செய்திகள் பற்றி கூறுகையில், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என பலரும்  இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சுயகட்டுப்பாடு வேண்டும். சர்ச்சைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமீப  நாட்களாக டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவது, அருவருப்பாக இருக்கிறது.
 
நான், எந்த விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை.” இவ்வாறு நடிகை  தன்சிகா கூறினார்.