ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 மே 2016 (13:42 IST)

மருதுவில் சாதி துவேஷ வசனங்கள்...? வரி விலக்கு கட்...

மருதுவில் சாதி துவேஷ வசனங்கள்...? வரி விலக்கு கட்...

குட்டிப்புலி என்ற முதல் படத்திலேயே, தேவர் சாதி பெருமை பேசுகிறவர் என்ற அவப்பெயரை பெற்றவர், இயக்குனர் முத்தையா.


 


அவரது இயக்கத்தில் வெளிவந்த கொம்பனும் தேவர் சாதியின் வறட்டு குணாம்சங்களை பிரஸ்தாபிப்பதாகவே இருந்தது.
 
அவரது மூன்றாவது படம், மருது. இதிலும் சாதி அபிமான, துவேஷ வசனங்கள், காட்சிகள் இருப்பதாக முன்பே கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் பல காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கத்தரித்துள்ளனர். அத்துடன் யுஏ சான்றிதழே அளித்துள்ளனர். அதனால் வரிவிலக்கு பெறும் தகுதியை மருது இழந்துள்ளது. 
 
மருதுவில் விஷால், ஸ்ரீதிவ்யா நடிக்க, கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் படத்தை தயாரித்துள்ளார். மே 20 படம் திரைக்கு வருகிறது.