மீண்டும் காதலில் தடுக்கி விழுந்த சமந்தா

மீண்டும் காதலில் தடுக்கி விழுந்த சமந்தா


Sasikala| Last Modified வியாழன், 12 மே 2016 (10:27 IST)
சமந்தாவும், சித்தார்த்தும் காதலித்ததும், இருவரும் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலில் தோஷம் கழித்ததும் வரலாறு.

 


அதன் பிறகு ஏன், எதற்கு என்று தெரியாமலே சமந்தாவும், சித்தார்த்தும் பரஸ்பரம் பைட்டில் இறங்கி பிரிந்தனர். ட்விட்டரில் சித்தார்த்தை வம்பிக்கிழுக்கும் சில பதிவுகளும் இட்டார் சமந்தா.
 
தொடர்ச்சியாக படங்களில் நடித்து டயர்டாகிவிட்டேன், இனி கொஞ்சகாலம் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்று கூறிய சமந்தா, நான் நல்ல மகளாகவோ, நல்ல தோழியாகவோ, பெண் தோழியாகவோ இருக்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். பெண் தோழி என்று அவர் குறிப்பிட்டதை மீடியா பிடித்துக் கொண்டது.

நீங்கள் மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? ஆள் யார் என்று கேட்க, 
நான் சிங்கிளாக இருப்பதாக யார் சொன்னது? மற்ற விஷயங்கள் என் அந்தரங்கம் பகிர முடியாது என்று டெம்போவை ஏகத்துக்கும் எகிற வைத்து எஸ்ஸாகிவிட்டார்.
 
சமந்தாவின் மனம் கவர்ந்த அந்த அதிர்ஷ்டசாலி மணாளன் யார் என்று மீடியா இண்டு இடுக்கிலெல்லாம் லென்ஸ் வைத்து தேடி வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :