1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (13:15 IST)

”கொஞ்சம் லேட்டுதான்”… கலர்புல்லான இலியானா – வைரல் pic!

நடிகை இலியானா பகிர்ந்துள்ள ஹோலி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ்.  தெலுங்கு சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  தமிழில் கேடிக்குப் பிறகு  விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. 

இப்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ள இலியானா சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்துவருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் இவர் இப்போது பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று கவனத்தைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல பிரபலங்களும் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். ஆனால் தாமதமாக இப்போது ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.