செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 17 பிப்ரவரி 2020 (18:24 IST)

இளமையின் காட்டில்.....மீண்டும் ஒரு மரியாதை படத்தின் வீடியோ பாடல் இதோ!

பாரதிராஜா கடைசியாக பொம்மலாட்டம் என்ற படத்தை இயக்கினார். அதன் பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள "மீண்டும் ஒரு மரியாதை" என்ற படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
வயதான முதியவர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையிலான கதையான இப்படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தில் இடப்பெறும் இளமையின் காட்டில் என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. நா. முத்துக்குமார் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.