1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:35 IST)

இளையராஜா பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்? சமூகவலைதளத்தில் பரவும் தகவல்!

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவர் இளையராஜா. 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த தகவலை இளையராஜா ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.