1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2024 (10:43 IST)

என் படம் புடிக்கலைனா விமர்சனம் பண்ணுங்க.. நான் ஏன் தடுக்கணும்? - நடிகர் சித்தார்த்

திரைப்படங்களை முதல் நாளே விமர்சனம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து குறித்து நடிகர் சித்தார்த் பேசியுள்ளார்.

 

 

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படங்கள் வெளியாகி மோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்து வருகின்றன. இதற்கு முதல்நாளே வெளியிடப்படும் விமர்சனங்களே காரணம் என தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால் கருத்து சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.

 

இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார், ஆஷிகா ரங்கநாத், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் முதல் நாளே படத்தை விமர்சனம் செய்வது குறித்து நடிகர் சித்தார்த்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதிலளித்த சித்தார்த் “என்னுடைய படத்தை விமர்சிக்க வேண்டாம் என நான் கூற மாட்டேன். ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு அப்படி செய்ய வேண்டாம் என கூறியதால் நீங்கள் அதை செய்யாமல் இருக்கலாம். நான் என்னுடைய படத்தை நீங்கள் விமர்சிக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். எல்லா படத்திற்காகவும் பேச முடியாது.
 

 

ஒரு நடிகராக என் நடிப்பு நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை என்ற கருத்துகளை நான் ஏற்க முடியும். தியேட்டரில் பாப்கார்ன் விலை ஏற்றுவதை நான் எப்படி கேட்க முடியும்? அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இதை கேட்க வேண்டுமென்றால் வாங்கிய சம்பளத்திற்கு அவர்கள் எல்லா விவகாரங்களிலும் கருத்து மட்டும்தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

 

நீங்கள் என் படத்தை வந்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் நன்றாக இருக்கிறது என விமர்சனம் எழுதுங்கள். பிடிக்கவில்லை என்றால் நன்றாக இல்லை என்று எழுதுங்கள். காசு கொடுத்து பார்க்கும் உங்களுக்கு முழு உரிமை உள்ளது, அதை நான் எப்படி தடுக்க முடியும்?” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K