1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (17:00 IST)

கமல்ஹாசன் இதை பார்த்தால் தன்னை மறந்து விசில் அடிப்பார்; கபிலன்!

விவேகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் அக்ஷாரா ஹாசன். படத்தை பற்றி இவரும் நிறைய  பேட்டிகளில் வியப்பாக பேசியுள்ளார்.


அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் அக்ஷரா ஹாசன், கருணாகரன்  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் படத்தைத் தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 
 
இந்த நிலையில் விவேகம் படத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கும் கபிலன் ஒரு பேட்டியில், படத்தின் திரைக்கதை எழுதும்போது எனக்கு மெய்சிலிர்த்த காட்சி அக்ஷாரா ஹாசனின் அறிமுகக் காட்சி. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு  நடிகைகளுக்கு இப்படி ஒரு அறிமுகக் காட்சி இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
 
திரையரங்களில் அக்ஷாராவின் அறிமுக காட்சியை பார்க்கும் கமல்ஹாசன் தன்னை மறந்து விசில் அடிக்க வாய்ப்பு உண்டு  என்று கபிலன் தெரிவித்துள்ளார்.
 
ஆகஸ்டு 10ம் தேதி விவேகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீசாகும்  என்று சிவா அறிவித்துள்ளார்.