சூர்யாவுக்கு ‘லவ் யூ’ சொன்ன மாதவன்


cauveri manickam| Last Modified சனி, 22 ஜூலை 2017 (15:15 IST)
மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தை, சூர்யா முதல் நாள் முதல் ஷோ பார்த்ததால், அவருக்கு ‘லவ் யூ’ சொல்லியுள்ளார் மாதவன்.
 

 

மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி நடிப்பில், புஷ்கர் – காயத்ரி இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படம், உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இந்தப் படத்தை, முதல் நாள் முதல் ஷோ பார்த்துள்ளார் சூர்யா.

“நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். ‘விக்ரம் வேதா’வை ரொம்பப் பிடித்திருக்கிறது. மாதவன், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சசிகாந்த், இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி என ப்ரில்லியண்ட் டீம்” என தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சூர்யா. அதற்குப் பதிலளித்த மாதவன், “தேங்க்யூ ப்ரதர். நீங்கள் மட்டும்தான் இந்த ட்ராஃபிக்கைக் கடந்து என்னுடைய படத்தைப் பார்க்க வந்துள்ளீர்கள். லவ் யூ மேன்” எனத் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :