வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (01:45 IST)

ராம்சரண் தேஜா படத்தை இயக்கவில்லை. சுசீந்திரன்

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை' உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'அறம் செய்து பழகு' என்ற படத்தை இயக்கி வருகிறார்



 
 
இந்த நிலையில் சுசீந்திரன், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா படம் ஒன்றை தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இயக்கவுள்ளதாக செய்திகள் உலா வந்தன
 
இந்த செய்தியை தற்போது இயக்குனர் சுசீந்திரன் தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். இது தவறான செய்தி என்றும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.