திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 4 மே 2023 (13:01 IST)

நான் சாகல உயிரோடு தான் இருக்கிறேன் - செல்வராகவன் பதிவால் பரபரப்பு!

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனரான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி , ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன , இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம் , என். ஜி. கே உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். 
 
அவரது வெற்றிப்படனல் காலங்கள் கடந்தும் பேசப்படும்படியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர், விவேக் ஒரு காமெடி யில் சொல்லுவார்  இயக்குனர் ஒவ்வொரு frame செத்துகிருக்கார்  அப்பிடி ஒரு படம் இது , அப்படி ஒரு இயக்குனர் செல்வராகவன்  அது ஒரு காலம்" என தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல்கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு ட்விட் செய்திருந்தார்.  ஆனால், அவரது பதிவில் தவறுதலாக செதுக்கியிருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்திருக்கார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
இதற்கு பதிலளித்த இயக்குனர் செல்வராகவன், ஏன் நண்பா? நான் இன்னும் சாகவில்லை. ஓய்வு பிறவும் இல்லை. நான் எனக்காகவே சிறிது காலம் ஓய்வெடுத்திருந்தேன். இப்போது நான் திரும்பி வந்துவிட்டேன். என கூறி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.