என்னடா இது… வெப் சீரிஸயும் ரீமேக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!
ஆங்கிலத்தில் வெளியான த நைட் மேனேஜர் என்ற சீரிஸை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.
மற்ற மொழிகளில் வெளியாகும் படங்களின் உரிமையை வாங்கி தங்கள் மொழிகளில் ரீமேக் செய்து பிரபலமான நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பது வழக்கம். ஆனால் இப்போது முதன் முதலாக வெப் சீரிஸ் ஒன்றை ரீமேக் செய்ய உள்ளனர். இந்த சீரிஸில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க உள்ளார்.
தி நைட் மேனேஜர். 1993ஆம் ஆண்டு வெளியான நாவல் 2016 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் டாம் ஹிடில்ஸ்டன் நடிப்பில் உருவானது. இப்போது அந்த சீரிஸை இந்தியில் எடுக்க உள்ள நிலையில் டாம் ஹிடில்ஸ்டன் வேடத்தில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க உள்ளாராம். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.