1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2017 (13:12 IST)

ஒரு படம் பார்க்க தேவை ஆயிரம் ரூபாயா? ஆயிரம் MBயா?

பத்து வருடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் ரூ.100 அல்லது ரூ.200 போதும். டிக்கெட் விலை ரூ.10, உள்ளே ஸ்னாக்ஸ் ரூ.10, பார்க்கிங் ரூ.5 என மொத்தம் ரூ25. நான்கு பேர் சென்றால் ரூ.100 ஆகும். கொஞ்சம் பெரிய தியேட்டர் என்றால் அதிகபட்சம் ரூ.200க்கு மேல் ஆகாது.



 
 
ஆனால் இந்த பத்து வருடத்தில் மக்களின் பொருளாதார நிலை மிஞ்சி மிஞ்சி போனால் இருமடங்கு அல்லது மூன்று மடங்கு ஏறியிருக்கும். ஆனால் சினிமா டிக்கெட் மட்டும் பத்து மடங்கு ஏறிவிட்டது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் இன்று தியேட்டருக்கு சென்றால் எவ்வளவு ஆகும் என்பதை பார்ப்போமா?
 
தியேட்டர் கட்டணம்   :120
வரி : 33
ஆன்லைன் முன்பதிவு : 30
பார்க்கிங் கட்டணம் : 30
ஸ்னாக்ஸ்         :100 
மொத்தம் :313 
4 பேருக்கு  313 x 4 = 1252 ரூபாய்
 
3D படம் என்றால் 3D கண்ணாடிக்கு தனியாக ரூ.30 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய சராசரி மக்களின் மனநிலை என்னவென்றால் ரூ.1000 செலவு செய்து படம் பார்ப்பதற்கு பதிலாக ஆயிரம் MB செலவு செய்து ஒரு படத்தை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்து நிம்மதியாக பார்த்துவிடுவோம் என்பதாகத்தான் உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.