படத்தைப் பார்க்காமலே நிராகரிப்பதா? : லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்


Murugan| Last Modified சனி, 21 நவம்பர் 2015 (15:35 IST)
தான் இயக்கியுள்ள  “அம்மணி” திரைப்படத்தை, துபாய் படக்குழு விழா பார்க்காமல் நிராகரித்ததற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 
நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள அம்மணி என்ற திரைப்படத்தை, துபாய் படவிழாவில் கலந்து கொள்வதற்காக எடுத்த முயற்சியில் தனக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
இது பற்றி அவர் கூறிய போது “ நான் இயக்கிய அம்மனி திரைப்படத்தை துபாய் பட விழாவில்(DIFF) கலந்து கொள்ளச் செய்வதற்காக விண்ணப்பித்தேன். அவர்கள் படத்தை விமியோ ஆன்லைன் ஸ்கிரீனர் மூலமாக அப்லோட் செய்யச் சொன்னார்கள். படம் வெளிவரவில்லை என்பதால் அதன் பாஸ்வேர்ட் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். அவர்கள் கேட்கும்போது பாஸ்வேர்டை அளிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அவர்கள் பாஸ்வேர்டை கேட்கவும் இல்லை, படத்தைப் பார்க்கவும் இல்லை. ஆனால் படம் தேர்வாகவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
 
இது போன்ற முயற்சிகளில், முன் அனுபவம், அந்த படக்குழிவினரில் நாம் எத்தனை பேரை தெரிந்து வைத்திருக்கிறோம் மற்றும்  பரிந்துரைகள் போன்றவை தான் எடுபடும் என்பது இப்போதுதான் புரிகிறது. நாம் அனுப்பும் படங்களை பரிந்துரை இன்றி பார்க்க அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. இதுபோன்ற படவிழாக்கள் ஊழல் மயமானது வருத்தத்துக்குரியது. சராசரி சினிமா ரசிகருக்கு என் படம் பிடிப்பதுதான் என்னை கவிரவிக்கும் விருதாக நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :