1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 30 மே 2016 (11:00 IST)

ஹெலிகாப்டர் சண்டைக் காட்சியில் நடிக்கும் விக்ரம்

ஹெலிகாப்டர் சண்டைக் காட்சியில் நடிக்கும் விக்ரம்

இரு முகன் படத்துக்காக ஹெலிகாப்டர் சண்டைக் காட்சியில் நடிக்கவிருக்கிறார், விக்ரம். பாங்காக்கில் இந்த சண்டைக் காட்சி எடுக்கப்பட உள்ளது.


 
 
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துவரும் படம், இரு முகன். நயன்தாரா, நித்யா மேனன் என்று இரு நாயகிகள். விக்ரமின் ஒரு வேடத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது வேடத்துக்கான காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜுன் 1 -ஆம் தேதி முதல் சோழிங்கல்லூரில் படப்பிடிப்பு நடக்கிறது.
 
அதனைத் தொடர்ந்து பாங்காக் செல்கிறது படக்குழு. அங்கு ஹெலிகாப்டரில் தொங்கியபடி விக்ரம் சண்டையிடும் காட்சியை எடுக்க உள்ளனர். இரு முகன் அதிபயங்கர சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.