வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (16:39 IST)

HBD நடிகை தேவயானி,,,ரசிகர்கள் வாழ்த்து மழை

தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் இன்று தனது 47 பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில், விண்ணுக்கும் மண்ணுக்கும், நீ வருவாய் என, சூரியவம்சம், காதல் கோட்டை, பிரெண்ட்ஸ், பஞ்ச தந்திரம், மூவேந்தர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தேவயானி. 90 களின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளமே வைத்திருந்தார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் சின்னத்திரையில் பக்கம் ஒதுங்கிய அவர் கோலங்கள், புதுப் புது அர்த்தங்கள், ராசாத்தி, முத்தாரம், பிரமோற்சவா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும், இவரது கணவர் இயக்குநர் ராஜகுமாரன். இவர்களுக்கு பிரியங்கா குமரன் மற்றும் இனிய குமரன் ஆகிய குழந்தைகள் உள்ளனர். தேவயானி இன்று தனது 47 பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் அவருக்கு  வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.