1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (07:46 IST)

திரையரங்கில் ஹிட் அடித்த பார்க்கிங் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

நகர்ப்புறங்களில் இந்த படத்துக்கு நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார்கள், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருவரையும் பாதிக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொன்ன படமாக அமைந்தது பார்க்கிங்.

திரையரங்கில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.