1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2024 (07:24 IST)

யுடியூபர் ஹரிபாஸ்கர் நடிகராக அறிமுகமாகும் “மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்”… டீசர் ரிலீஸ் அப்டேட்!

வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகத்தில் திறமையுள்ள பல நபர்கள் திரைத்துறையில் சாதித்து வருகின்றனர். அந்த யூடியூபில் சிங்கிள் நபராக இரண்டு மூன்று கதாபாத்திரம் ஏற்று பல காமெடி வீடியோகளை பதிவேற்றம் செய்து குறுகிய காலத்தில் சூப்பர் பேமஸ் ஆனவர் ஹரிபாஸ்கர்.

யுடியூபர்கள் சினிமாவில் களமிறங்கும் தற்போதைய ட்ரண்ட்டின் படி இவரும் இப்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்துக்கு ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார்.

 இந்த படத்தை அருண் ரவிச்சந்திரன் என்பவர் எழுதி இயக்குகிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழங்க இன்வேட் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்த ‘நினைவோ ஒரு பறவை’ திரைப்படம் எந்த அப்டேட்டும் இல்லாமல் கிடப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.