ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (08:28 IST)

ஷாலினி அஜித் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
ஷாலினி கடந்த 1983ஆம் ஆண்டு ஆனந்த கும்மி என்ற தமிழ்த் திரைப்படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் 
 
அதன்பின்னர் அமர்க்களம், கண்ணுக்குள்-நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்தார்.தல அஜித்தை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஷாலினிக்கு அனோஸ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷாலினி அஜித்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது